அறிமுகம்
இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஹில் பீல்ட் சர்ச், கொவென்ட்ரி (Hillfields Church Coventry, UK ) ஆலயத்திற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
சிறியோர் முதல் பெரியோர் வரை, பல்வேறு வயதினரையும், பல்வேறு நாட்டினரையும் கொண்ட நாங்கள், பிதாவாகிய தேவன், குமாரனாகிய இயேசு கிறிஸ்து மற்றும் பரிசுத்த ஆவியானவரின் அடிப்படையில், பரிசுத்த வேதாகமத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வருகிற சபை.
நாங்கள் ஒருவரிலொருவர் அன்பு கூர்ந்து, ஒருவரையொருவர் தாங்கி இயேசு கிறிஸ்துவின் போதனையில் இயங்கி வருகிறோம். எங்களிடம் வருவோர்களையும் அவ்விதமாகவே ஏற்று கொள்ளுகிறோம். தமிழ் மொழி பேசுகின்ற உங்களையும் அன்புடன் வரவேற்கிறோம்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பற்றியும், கிறிஸ்தவ சத்தியத்தைக்குறித்தும், சிறு குழுக்கள் மூலமாகவோ, அல்லது வேதாகமத்தை அறிந்தவர்களுடன் தனியாகவோ(one to one)இருந்து, கற்று கொள்ளவும் மற்றும் ஆராயவும் நாங்கள் உங்களுக்கு உதவ விரும்புகிறோம்.
மேலும், ஆங்கில மொழியை மேம்படுத்திக் கொள்ளவும் நாங்கள் உங்களுக்கு உதவுகிறோம்.
பல்வேறு பணிபுரிபவர்கள், மாணவ, மாணவியர்கள், அணைத்து வயதினர், கோவென்ட்ரிக்கு வருகை தரும் அனைவைரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
ஞாயிறு ஆராதனைகள் (Sunday Services)
எங்கள் ஆலயத்தில் இரண்டு காலை ஆராதனைகள் 9.30 மற்றும் 11.30 மணிக்கு நடைபெருகிறது. இது எல்லா வயதினருக்கும் ஏற்றது. பாடல் வேளைகளில் பாடல்கள் பாடப்படும் (முறைப்படி இசை கற்றிருக்க அவசியம் இல்லை) இரண்டு ஆராதனைகளிலும் ஒரே வேதாகமப்பகுதி வாசிக்கப்பட்டு, ஒரே தேவ செய்தி வழங்கப்படும்.
ஆராதனை வேளைகளில் குழந்தைகளை கவனித்துக் கொள்ள தனி இடம் உண்டு, ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஞாயிறு பள்ளியும் உண்டு.
இரண்டு ஆராதனைகளுக்கு இடையில் தேநீர் வழங்கப்படும், இதன் மூலமாக அனைவரையும் சந்திக்கவும், பழகவும் வாய்ப்புகள் கிடைக்கும்.
மாலை ஆராதனை 18.30 மணிக்கு நடைபெறும். இது காலை ஆராதனைப் போன்றே நடைபெறும்.
சில வாரங்களில் அன்பின் விருந்து நடைபெறும், இதன் மூலமாக பலருடன் பேசிப்பழகி நட்பை வளர்க்க முடியும்.
நாங்கள் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மதிய உணவும், மாலை ஆராதனைக்கு பின்பு இரவு உணவும் தருகிறோம்.
எக்ஸ்ப்ளோர்- வேத ஆராய்ச்சி குழு (Explore)
எக்ஸ்ப்ளோர் என்னும் கூடுகை, அனைத்து வயது சர்வதேச மாணவர்களுக்காக, தொடங்கி நடத்தப்பட்டு வருகிறது.
புதன் கிழமை மாலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும் இக்குழுவில் நீங்கள் வந்து, உங்கள் நட்பை வளர்த்துக்கொள்ளவும், ஆங்கிலம் பேச பழகிக்கொள்ளவும், இயேசு கிறிஸ்துவை பற்றி அறிகிற அறிவை வளர்த்துக்கொள்ளவும் முடியும்.
இதுமட்டுமின்றி இக்குழுவில் இரவு விருந்து, விளையாட்டு, நம் வாழ்வு குறித்த கலந்துரையாடல், மற்றும் வேதாகம அறிவையும் வளர்த்துக்கொள்ளும் வாய்ப்பும் வழங்கப்படுகிறது.
சிலசமயம் இக்குழுவில் வருகிற அனைவரும் ஒன்றாக சேர்ந்து சிறுபயணம் மேற்கொள்வோம், சிலசமயம் மற்ற சபை நிகழ்வுகளான மலையேற்றம் அல்லது நடைபயணம் போன்றவற்றில் பங்கேற்போம்.
இதைப்பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள திருமதி. கேத்தரின் அயரை (Mrs. Catherine Ayre) அணுகவும்.
மலைப்பாதை நடைபயணம்
மலைப்பாதை நடைபயணமானது 18 முதல் 30 வயதுடையவர்களுக்கான ஒரு நாள் நடைபயணம். இது Peak Districtல் நடைபெறும்.
இப்பயணத்தில் பேசிக்கொண்டே நடப்போம். கிராமப்புறங்களிலும் இப்பயணம் மேற்கொள்ளுவோம். இதற்கு வாகனம் ஒழுங்கு செய்யப்படும். இது ஒருவரைப்பற்றி ஒருவர் அறிந்து கொள்ளவும் புதிய நண்பர்களை உருவாக்கவும் உதவுகிறது. மேலும் வாழ்வின் முக்கிய நிகழ்வுகளை பிறரோடு பகிர்ந்து கொள்ள இயலும். நடைப்பயணத்திற்கு பின்பு ஓரிடத்தில் அமர்ந்து தேநீர் அருந்தி அந்த நாளை மகிழ்ச்சியுடன் நிறைவு செய்வோம்.
இதைப்பற்றி மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள திரு. ஆன்றி நாரிஸ்(Mr. Andy Norris) அவர்களை தொடர்பு கொள்ளவும்.
இறுதியாக
எங்கள் சபை பற்றிய முக்கியமான தகவல்களை இந்த வலைப்பக்கம் வாயிலாக உங்களுக்கு அளிக்கின்றோம், இது உங்களுக்கு உபயோகமாக இருந்திருக்கும் என நம்புகிறோம். இன்னும் சபை பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ள, எங்கள் ஆங்கில வலைப்பக்கத்தை பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
இயேசுவை குறித்தோ கிறிஸ்தவ விசுவாசத்தை குறித்தோ அல்லது இவ்வாலயத்தை குறித்தோ மேலும் அறிய விரும்பினால் கீழ்காணும் மின் அஞ்சலை தொடர்பு கொள்ளலாம். tamil@hillfields.church அல்லத
நீங்கள் ஆங்கிலம் தெரிந்த மாணவராக இருப்பின், International.students@hillfields.church மற்றவர்கள் ஆங்கிலத்தில் தொடர்புக்கொள்ள email@hillfields.church